
பொதுத் தேர்தலை நடாத்துவதே தற்போதைய அரசியல் பிரச்சினைக்கான தீர்வென்றாகியிருக்கும் நிலையில் மஹிந்த தரப்பின் நிர்வாகத்தின் கீழ் தேர்தலை நடாத்த அனுமதிக்க முடியாது என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடெனின், கூட்டரசொன்றை நிறுவதி அதனூடாக தேர்தலை நடாத்த ஐக்கிய தேசியக் கட்சி முன் வர வேண்டும் என்கிறார் லக்ஷ்மன் யாப்பா.
2015 முதல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்த கூட்டணி அரசை முறித்துக் கொண்டே மஹிந்த தரப்போடு இணைந்து கொண்ட மைத்ரி அணி, தற்போது மீண்டும் கூட்டரசொன்றை நிறுவ அழைபபு விடுக்கின்றது.
எனினும், மைத்ரி முழுக்கவும் சட்டவிரோதமாக இயங்கியிருப்பதன் பின்னணியில் அவரது நியமனங்களும் சட்ட விரோதம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment