கூட்டுறவு தேர்தலைக் கூட வெல்ல முடியாதவர் 'மைத்ரி': ஹக்கீம் சாடல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 24 November 2018

கூட்டுறவு தேர்தலைக் கூட வெல்ல முடியாதவர் 'மைத்ரி': ஹக்கீம் சாடல்!


கூட்டுறவுத் தேர்தல் ஒன்றைக் கூட தனது பிரதேசமான பொலன்நறுவயில் மைத்ரியால் வெல்ல முடியாது போனதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவிலேயே அவர் ஜனாதிபதியாகக் கூட நிலைத்திருந்ததாகவும் தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.


ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிக்கும் பாரிய திட்டத்துடன் சிறுபான்மை கட்சிகளை வளைத்துப் போட்டுவிடலாம் என மைத்ரி கனவு கண்டதாகவும் எனினும் தான் தனது உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு மக்கா சென்று அதிலிருந்து விடுபட்டதுடன் திரும்பி வந்து மைத்ரிக்கு நல்ல பாடம் கற்பித்ததாகவும் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

மீளவும் ஊழல் இராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கவே மைத்ரி முயற்சிப்பதாகவும் அதற்குத் தாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லையெனவும் ஹக்கீம் இன்று கண்டியில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment