
இன்றைய அரசியல் சூழ்நிலையில் இலங்கையின் நன்மதிப்பு சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நினைத்துத் தான் வெட்கப்படுவதாகவும் வேடர் சமூகத் தலைவர் வன்னில அத்தோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரச நிர்வாகம் சீர்குலைந்துள்ள நிலையில் இலங்கை தொடர்பில் வெளிநாடுகளில் தவறான எண்ணப் போக்கு வளர்ந்துள்ளதாகவும் கடந்த வாரம் இந்தியாவில் இடம்பெற்ற பாரம்பரிய வைத்திய முறைமைகள் அடிப்படையிலான மாநாட்டில் தான் பங்கேற்ற போது அங்கும் தன்னிடம் பலர் இது பற்றி பேசியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் தற்போதைய நிலை குறித்து கருத்துக்கள் வெளியிடப்படுகின்ற அதேவேளை நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment