
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் மகாநாயக்கர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.
ஐக்கிய தேசியக் கடச்சியின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் வைத்தே நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு தெரிவித்ததோடு தமது தரப்பு மகாநாயக்கர்களை சந்திக்கச் சென்றிருந்த வேளையில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து மகாநாயக்கர்கள் கவலையுடன் அதிருப்தி வெளியிட்டதாக தெரிவிக்கிறார்.
இதேவேளை, மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி, சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்கின்றமை நாட்டைப் பேராபத்துக்குள் தள்ளியிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment