
நாடாளுமன்றில் எந்த அணிக்குப் பெரும்பான்மைப் பலம் உள்ளதோ அந்த அணியின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது சபாநாயகரின் கடமையென விளக்கமளித்துள்ளார் கரு ஜயசூரிய.
இக்கட்டான இக்கால கட்டத்தில் தனது நடவடிக்கைகளைப் பாராட்டியும், ஆசீர்வதித்தும் தனக்காக வாழ்த்துக்களை அனுப்பிக் கொண்டிருப்போருக்கும் ஊடக அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துள்ள அவர், அடிப்படை ஆதாரமற்ற வகையில் தன் மீது குற்றச்சாட்டுகளை வைத்து ஆங்காங்கு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதை நிராகரித்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற சம்பிரதாய பிரகாரம் 225 பேரில் 122 பேரைக் கொண்ட அணியின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பும் தமக்கிருப்பதாக அவர் தெரிவித்துள்ள நிலையில் நாளைய தினம் மீண்டும் சபை அமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment