
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் பொது வேட்பாளர் ஒருவரே களமிறக்கப்படுவார் என நேற்றைய தினம் தெரிவித்திருந்த நவின் திசாநாயக்க, இம்முறை பொது வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே களமிறக்கப்படுவார் என விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிமுகப்படுத்தி தற்போது நொந்து போயுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, மீண்டும் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கப் போகிறதா எனும் கேள்வியெழுப்பப்பட்டு வரும் நிலையில் நவின் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, கரு ஜயசூரிய ஊடாகத் தான் கட்சித் தலைமைக்கு முயற்சிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் கருத்தையும் வன்மையாகத் தான் கண்டிப்பதாகவும் தனக்கு அவ்வாறான எண்ணம் எதுவுமில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment