
அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அமைச்சு செயலாளர்கள் நாடாளுமன்ற அனுமதியின்றி பொது நிதியை உபயோகிப்பதற்கு தடை கோரி பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.
அரசியல் சட்டத்தின் 148வது பிரிவின் படி பொது நிதியை உபயோகிக்க அமைச்சு செயலாளர்கள் நாடாளுமன்ற அனுமதி பெற வேண்டும் எனவும் அதனடிப்படையில் தற்போதைய சூழ்நிலையில் அமைச்சர்களுக்கு சம்பளம் அல்லது இதர தேவைகளுக்காக அமைச்சு செயலாளர்கள் பொது நிதியை நேரடியாக உபயோகிக்க முடியாது எனவும் அப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தவிர, இரு பிரேரணைகளை ஐ.தே.க நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதுடன் ஒன்றின் வாக்கெடுப்பு 29ம் திகதி இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment