
இரட்டைக் குடியுரிமை கொண்டிருந்ததன் பின்னணியில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த கீதா குமாரசிங்க, தனது சுவிஸ் பிரஜாவுரிமையை கை விட்டு, அதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை தேர்தல் ஆணையகத்தில் ஒப்படைத்துள்ளார்.
தனது தொகுதி மக்களின் நலனுக்காக குடும்பத்தினரின் பலத்த எதிர்ப்பையும் மீறி தான் இவ்வாறு முடிவெடுத்ததாகவும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கீதா தெரிவிக்கின்றார்.
தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியானால் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடப் போவதாக கோத்தாபயவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment