
பெரும்பான்மையில்லாத மஹிந்தவின் அமைச்சரவையிலிருந்து தான் விலகி விட்டதாக தெரிவித்திருந்த வசந்த சேனாநாயக்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த தரப்பிடம் பெரும்பான்மையிருக்கும், அதன் மூலம் தமது தொகுதி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாம் எனக் கருதியே தான் அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்ததாகவும் பின் மஹிந்த ராஜபக்சவிடம் பெரும்பான்மை இல்லையென்பதால் அதனைக் கைவிடுவதாகவும் வசந்த அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று வசந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு சமூகமளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment