
நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியை விட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பலம் வாய்ந்தது என்பதை ஏற்றுக்கொண்டதனாலேயே இன்றைய தினம் கரு ஜயசூரிய சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லையென தெரிவிக்கிறார் தினேஸ் குணவர்தன.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி இனி நாடாளுமன்றில் செல்லாக் காசு என தெரிவிக்கின்ற அவர், இன்றைய தினம் பிரதமரின் செலவீனங்கள் குறித்து சபையில் முன் வைக்கப்பட்ட கருத்துக்களுக்கும் இடமில்லையெனவும் அது ஆளுங்கட்சியான தமது தரப்பினால் மாத்திரமே பேசப்படக் கூடிய விடயங்கள் எனவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 23ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment