
இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவுபூர்வமாக நடந்து கொண்டதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதும், நாடாளுமன்றைக் கலைக்க முற்பட்டதும் அரசியல் சட்டத்திற்குட்பட்டதெனவும் தான் எந்தத் தவறும் செய்யவில்லையெனவும் தொடர்ந்தும் தெரிவித்து வரும் மைத்ரி, ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற பெரும்பான்மையை ஏற்க மறுத்து வருகிறார்.
இந்நிலையிலேயே, இன்று நாடாளுமன்றம் கூடி 23ம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் மைத்ரி.
No comments:
Post a Comment