நாடாளுமன்றம் கூடுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு! - sonakar.com

Post Top Ad

Monday, 19 November 2018

நாடாளுமன்றம் கூடுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு!


நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு செயலாளருக்கு எவ்வித அதிகாரமுமில்லையென தெரிவித்து முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வழக்குத் தொடர்ந்துள்ளார்.


உச்ச நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்துள்ள அவர், இடைக்கால தடையின் போது நாடாளுமன்றம் கூட்டப்படக் கூடாது என தெரிவிக்கிறார்.

கடந்த மாத இறுதியில் நாடாளுமன்றம் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உட்பட முக்கிய கட்சிகள் தாக்கல் செய்திருந்த வழக்கின் அடிப்படையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறித்த வழக்கின் விசாரணை டிசம்பர் 5,6 மற்றும் 7ம் திகதிகளில் இடம்பெறுவதோடு 7ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment