மஹிந்தவால் முடியாது: UNF அரசுக்கு ஆதரவு: TNA எழுத்து மூலம் அறிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 29 November 2018

மஹிந்தவால் முடியாது: UNF அரசுக்கு ஆதரவு: TNA எழுத்து மூலம் அறிவிப்பு!


கடந்த 26ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட புதிய பிரதமருக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் அத்தினத்துக்கு முன்னிருந்த ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசுக்கு தமது தரப்பு ஆதரவளிப்பதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு.தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் இணைந்து ஒப்பமிட்டுள்ள இக்கடிதம் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் தவிர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசுக்கு 117 பேரின் ஆதரவு உறுதி செய்யப்பட்டுள்ளமையும் ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து நாடாளுமன்ற பெரும்பான்மையுள்ள ஒருவரை ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment