
அரசியல் பரபரப்போடு மீண்டும் வசீம் தாஜுதீன் விவகாரம் முன் நிலைக்கு வந்துள்ளது.
குறித்த வழக்கு நீண்டகாலமாக இழுபறியில் செல்கின்ற நிலையில் சந்தேக நபர்கள் இருந்தால் அவர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஒப்படைக்குமாறு இன்று உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கே கொழும்பு கூடுதல் மஜிஸ்திரேட் இசுரு நெடிகுமார இன்று இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
கூட்டாட்சி அரசின் ஆரம்பத்தில் பெரும் பரபரப்போடு பேசு பொருளான இவ்விவகாரம் தொடர்பில் ஒரு வருடத்திற்குள் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மூன்றரை வருடங்கள் கழிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இவ்விவகாரம் பேசு பொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment