
இலங்கையில் இடம்பெற்று வரும் ஜனநாயக விரோத அரசியல் செயற்பாடுகளைக் கண்டித்து, ஐக்கிய இராச்சியத்தின் மக்கள் விடுதலை முன்னணி செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் லண்டனில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற கலைப்பு, பிரதமர் நீக்கம் என மைத்ரி மேற்கொண்ட அரசியல் பரபரப்பு நடவடிக்கைகளால் நாடாளுமன்ற ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதாக சர்வதேச அளவில் கண்டனக்குரல்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியில் தற்சமயம் லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருவதுடன் அனைத்தினங்களையும் சேர்ந்த செயற்பாட்டார்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Pics: Afham I.
No comments:
Post a Comment