
டிசம்பர் 7ம் திகதி உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வரும் வரை இனி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கப்போவதில்லையென தெரிவிக்கிறது மஹிந்த ராஜபக்ச அணி.
இன்றைய தினம் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீதான வாக்கெடுப்பின் போது அதில் பங்கேற்காது மஹிந்த அணி பயந்து ஓடி விட்டதாகவும் அவர்களிடம் 85 பேர் கூட இல்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இனிமேல் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து 29ம் திகதி இடம்பெறவுள்ள வாக்கெடுப்பையும் மஹிற்த அணி தவிர்க்க முயல்கின்றமையும் அன்றைய தினம் அமைச்சு செயலாளர்கள் பொது நிதியை உபயோகப்படுத்துவதற்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment