
தமது தரப்பு இது வரை தெரிவித்து வந்தது போல் 122 பேருடனான பெரும்பான்மையை இன்று நாடாளுமன்றில் நிரூபித்துள்ளதாக தெரிவிக்கும் ராஜித சேனாரத்ன, அடுத்த வாரம் அது இன்னும் அதிகரிக்கும் என தெரிவிக்கிறார்.
இன்றைய தினம் ராஜிதவின் புதல்வர் சத்துர மாத்திரமே சபையமர்வில் கலந்து கொள்ளாத நிலையில் 121 பேர் நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனத்தை ஆதரித்து வாக்களித்திருந்தனர்.
மஹிந்த தரப்புக்கு பெரும்பான்மையில்லையென்பதை இதை விடவும் நிரூபிக்க அவசியமில்லையாயினும் அடுத்த வாரம் தமது அணியின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என தெரிவிக்கின்றமையும் 29ம் திகதியும் வாக்கெடுப்பொன்று நிகழவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment