STF துப்பாக்கிச் சூடு: பாதாள உலக பேர்வழிகள் வசந்த - உப்புல் மரணம்! - sonakar.com

Post Top Ad

Monday, 26 November 2018

STF துப்பாக்கிச் சூடு: பாதாள உலக பேர்வழிகள் வசந்த - உப்புல் மரணம்!



கொட்டாவயில் இன்று மாலை இடம்பெற்ற விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஹபரகட வசந்த மற்றும் மீகொட உப்புல் என அறியப்படும் இரு பாதாள உலக பேர்வழிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


வழமை போன்று விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட நிலையில் பதில் தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் அதன் போது குறித்த நபர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் பாதாள உலக வேட்டை ஆரம்பித்துள்ள அதேவேளை தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் அரச உயர் மட்டம் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமையும் தேர்தல் ஒன்றே தீர்வென அரசியல்வாதிகள் கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment