இனிமேல் 'தாவ' மாட்டேன்: மன்னிப்புக் கேட்கும் வசந்த! - sonakar.com

Post Top Ad

Monday, 26 November 2018

இனிமேல் 'தாவ' மாட்டேன்: மன்னிப்புக் கேட்கும் வசந்த!


தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தான் ஒரு கேலிப் பாத்திரமாக உருவாகியுள்ளதை நினைத்து கவலைப்படுவதாக தெரிவிக்கும் வசந்த நானாயக்கார பொலன்நறுவயின் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உயர் மட்டத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.



பக்கம் தாவிக் கொண்டிருக்கும் வசந்த, இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்சவும் தன்னால் கவலையடைந்தால் அவர்களும் தன்னை மன்னிக்க வேண்டும் என்கிறார்.

இதேவேளை, இனியொரு தடவை கட்சி தாவப் போவதில்லையெனவும் வசந்த சேனாநாயக்க 'உறுதி'யளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment