நாடாளுமன்ற கலைப்பு விவகாரத்தை விசாரிக்க ஏழு நீதிபதிகள்! - sonakar.com

Post Top Ad

Monday, 26 November 2018

நாடாளுமன்ற கலைப்பு விவகாரத்தை விசாரிக்க ஏழு நீதிபதிகள்!


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி உட்பட பிரதான கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 வழக்குகளின் பின்னணியில் இது குறித்த விசாரணைகள் டிசம்பர் 5,6 மற்றும் 7ம் திகதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இவ்விசாரணையை நடாத்த ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழுவை நியமித்துள்ளார் பிரதம நீதியரசர்.

இதனடிப்படையில், நலின் பெரேரா, விஜித் மலல்கொட, சிசிர டி அப்ரூ, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன மற்றும் முர்து பெர்னான்டோ ஆகியோர் இவ்விசாரணையை மேற்கொள்ளவுள்ளதுடன் டிசம்பர் 7ம் திகதி தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment