இன்றும் குழப்பக்காரர்கள் காத்திருந்தார்கள்: கரு! - sonakar.com

Post Top Ad

Monday, 19 November 2018

இன்றும் குழப்பக்காரர்கள் காத்திருந்தார்கள்: கரு!


நாடாளுமன்றில் கலகம் விளைவித்தோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் குழப்புவதற்கு கலகக்காரர்கள் காத்திருந்தார்கள் என தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், இன்று கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் குழப்பங்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டதாகவும் சபாநாயகர் விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்றம் எதிர்வரும் 23ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இடையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கான பெரும்பான்மையை ஆவண ரீதியில் ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment