ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கும் JVP - கரு! - sonakar.com

Post Top Ad

Sunday, 18 November 2018

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கும் JVP - கரு!



அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி விடுத்திருக்கும் அழைப்பை ஜே.வி.பி நிராகரித்துள்ளதுடன் சபாநாயகர் கரு ஜயசூரியவும் தான் கலந்து கொள்ளப் போவதில்லையென தெரிவிக்கிறார்.


அரசியல் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பென்பதால் அதில் தான் பங்களிப்பது அர்த்தமற்றது என கரு ஜயசூரிய விளக்கமளித்துள்ள அதேவேளை, சர்ச்சையைத் தீர்க்க வேண்டிய ஜனாதிபதி அதனை வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் அர்த்தமில்லையென ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

தனது நிறைவேற்று அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் மைத்ரி, இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பையும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment