அதிகரிக்கும் சர்வதேச அழுத்தம்: IMF நிதி இடை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Sunday, 18 November 2018

அதிகரிக்கும் சர்வதேச அழுத்தம்: IMF நிதி இடை நிறுத்தம்



கடந்த ஒக்டோபர் 26ம் திகதி முதல் இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் குழப்ப நிலையின் பின்னணியில் இலங்கைக்கான தமது நிதி உதவித் திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது சர்வதேச நாணய நிதியம்.

பெரும்பாலும் சர்வதேச நிதியுதவியில் தங்கியே கடந்த மூன்று வருட காலம் இலங்கை அரசாங்கம் நீடித்து வந்த அதேவேளை ராஜபக்ச அரசின் கடன் சுமையைக் காரணங் காட்டியிருந்தது. இந்நிலையில் சீனா மாத்திரமே மஹிந்த அரசை அங்கீகரிக்கும் நிலையில் சர்வதேச நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளன.



அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஏலவே ஜனாதிபதியின் நடவடிக்கைகள் தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளதுடன் இலங்கையின் எதிர்காலம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment