ஒட்டமாவடி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 18 November 2018

ஒட்டமாவடி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்புபெரும் சேதத்துக்குள்ளான ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பாலைநகர் பிரதான வீதி தவிசாளர் ஐ.ரீ.அஸ்மியின் பணிப்புரைக்கு அமைவாக புனரமைப்பு செய்யும் பணிகள் இடம்பெற்றுள்ளது. 

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பாலைநகர் பிரதான வீதி வெள்ள நீரினால் உடைப்பெடுத்து பெரும் சேதத்துக்குள்ளானது. 


இதனால் இக்கிராமத்துக்குச் செல்லும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதுடன், வாகனங்கள் முற்றாக போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. 

இது தொடர்பாக பாலைநகர் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினரும், கிராம மக்களும் தவிசாளரிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க, சேதமடைந்த வீதி தவிசாளரது பணிப்புரைக்கு அமைவாக உடனடியாக திருத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது. 

அத்துடன் எதிர்வரும் நாட்களில் மழை தொடர்ந்தால் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு ஏற்றதாக இவ்வீதியில் உள்ள கல்வெட்டும் அதனை அண்மித்த கால்வாய்ப் பகுதியும் தோண்டி துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

-அனா

No comments:

Post a Comment