மைத்ரிபால சிறிசேன பதவி விலக வேண்டும்: JVP - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

மைத்ரிபால சிறிசேன பதவி விலக வேண்டும்: JVP


இத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னரும் கொஞ்சமாவது வெட்கம் இருந்தால் மைத்ரிபால சிறிசேன தானாகப் பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.



1970 களில் கௌரவமாக இள வயது உறுப்பினராக நாடாளுமன்றம் நுழைந்த மஹிந்த ராஜபக்ச இன்று வெட்கித் தலை குனிந்து எழுந்து சென்றதைப் பார்த்து தான் கவலையடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன் மஹிந்த ராஜபக்சவும் கௌரவமாக தான் பதவி விலகுவதாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எனினும், இன்றைய வாக்கெடுப்பை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தினேஷ் குணவர்தன தரப்பு தெரிவிக்கின்றமையும் 122 பேர் கையொப்பமிட்டு பெரும்பான்மையை நிரூபிக்கும் கடிதம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment