
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏலவே திட்டமிட்டபடி நாளைய தினம் நாடாளுமன்றைக் கூட்டுமாறு வலியுறுத்தியுள்ளது ஜே.வி.பி.
நிறைவேற்று அதிகாரத்தினை எதோச்சாதிகாரமாக உபயோகித்து, ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைத்ததாக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்விடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் நாளைய தினம் நாடாளுமன்றைக் கூட்டுமாறு வலியுறுத்தி சபாநாயகரை சந்தித்து வலியுறுத்தவுள்ளது ஜே.வி.பி.
இடைக்காலத் தடையுத்தரவு ஜனாதிபதிக்குக் கிடைத்த பின்னடைவென கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment