சபாநாயகர் நாடகமாடுகிறார்: JO குற்றச் சாட்டு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

சபாநாயகர் நாடகமாடுகிறார்: JO குற்றச் சாட்டு!


ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையில்லையெனவும் கரு ஜயசூரிய நாடாகமாடுவதாகவும் தெரிவிக்கின்றனர் கூட்டு எதிர்க்கட்சியினர்.



இலத்திரனியல் வாக்கெடுப்பொன்றை நடாத்தாது நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அபிப்பிராயம் அறிய முற்பட முடியாது எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். எனினும், நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து 120க்கும் அதிகமானோர் எழுந்து நின்ற அதேவேளை, அதனை யாரும் எதிர்க்கவில்லையென்பதால் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவிக்கிறார்.

வாக்களிப்பை நடாத்த விடாத சூழ்நிலை தொடர்ந்த நிலையில் சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment