வாக்கெடுப்பென்றதும் எழுந்து சென்ற மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

வாக்கெடுப்பென்றதும் எழுந்து சென்ற மஹிந்த!


நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடாத்த முயன்ற வேளையில் மஹிந்த ராஜபக்ச சபையை விட்டு எழுந்து சென்றிருந்தார்.



இலத்திரனியல் வாக்கெடுப்பினை நடாத்த முடியாத அளவு சபையில் கூச்சலும் குழப்பமும் நிலவிய நிலையில் வாய் மூலமான ஆதரவுக் குரல் மற்றும் கண்ணுக்குத் தெரியும் தொகையினை அடிப்படையாகக் கொண்டு தான் முடிவெடுக்க நேரிடும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மஹிந்த ஏலவே எழுந்து சென்றிருந்ததுடன் கூட்டு எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் கூச்சலில் ஈடுபட்டு சபை நடவடிக்கைகளை குழப்பியதன் பின்னணியில் நாளை காலை வரை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment