
தாங்கள் செய்யும் கொலைகளையெல்லாம் செய்து விட்டு புனித அல்-குர்ஆனை முன் வைத்து அமைப்பு நாடகமாடுவது போல் தமது ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு ஜனநாயக போர்வை போர்த்தி ஐக்கிய தேசியக் கட்சியும் சபாநாயகரும் நாடகமாடுவதாக தெரிவிக்கிறார் டலஸ் அழகப்பெரும.
இன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்த மஹிந்த அணி, நாடாளுமன்ற உணவகத்தில் குறைந்த விலையில் உணவருந்தி மக்கள் அபிலாசைகளுக்கு எதிராக தமது வரப்பிரசாதங்களைப் பயன்படுத்திக் கொள்வதாக நாடாளுமன்றில் விமர்சிக்கப்பட்டிருந்த நிலையில் மஹிந்த அணியினர் செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர்.
இதன்போதே இவ்வாறு தெரிவித்த டலஸ், தனக்கு வேறு உதாரணங்களை சிந்திக்க இயலாதுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment