
மைத்ரி கொலைத்திட்டத்தில் தானும் தொடர்பு பட்டிருப்பதாக அண்மையில் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரை நாடாளுமன்றுக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் சரத் பொன்சேகா.
தனக்கோ ரணிலுக்கோ பிரதமர் பதவியைத் தரப் போவதில்லையென தெரிவித்த மைத்ரி, அவரைக் கொலை செய்யும் திட்டத்தில் தான் தொடர்புபட்டிருப்பதாக தெரிவிக்கின்றமை பாரிய குற்றச்சாட்டெனவும் அது பற்றி விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், அவை தொடர்பான விசாரணைகள் நடந்து வருவதாகவும் விரைவில் தகவல்கள் வெளியாகும் எனவும் அண்மையில் மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment