
கடந்த ஞாயிறு தன் மீது பெற்றோல் குண்டு வீச முனைந்ததாகவும் அது தொடர்பில் தான் பசறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் தமது வரப்பிரசாதங்கள் மறுக்கப்படுவதாகவும் சபாநாயகரிடம் முறையிட்டுள்ளார் வடிவேல் சுரேஷ்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எனும் அடிப்படையில் தனக்கான பாதுகாப்பை வழங்க வேண்டிய பொலிசார் தனது தொலைபேசி அழைப்புகளையும் புறக்கணித்து வருவதாகவும் தனது ஆதரவாளர்கள் வீதிக்கு இறங்கிப் போராடும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் வடிவேலு சுரேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தான் பொலிஸ் மா அதிபருடன் இது பற்றிப் பேசுவதாக சபாநாயகர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment