எதிர்வரும் நாட்களில் ஓரிரு கொலை நிகழலாம்: அமரவீர! - sonakar.com

Post Top Ad

Sunday, 18 November 2018

எதிர்வரும் நாட்களில் ஓரிரு கொலை நிகழலாம்: அமரவீர!


தற்போதைய சூழ்நிலை நீடிக்கும் பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்படக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதா ஆரூடம் தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.


நாடாளுமன்றில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு சபாநாயகரே காரணம் எனவும் தெரிவிக்கின்ற அவர், இவ்வாறான கட்டத்தில் சபாநாயகரே அதற்குப் பொறுப்பாளியாவார் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே சபாநாயகரின் ஆசனத்தையும் கைப்பற்றி, மஹிந்த தரப்பினரே ஆக்ரோசமான அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த நிலையில் அமரவீர இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment