
ஜி 20 மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புட்டின் மற்றும் ஐ.நா செயலாளரை சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் (30) ஆரம்பமாகவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள முஹம்மத் பின் சல்மான் அங்கு சென்றுள்ள நிலையில் புட்டின் சந்திப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை விவகாரத்தில் முஹம்மத் பின் சல்மான் தொடர்புபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லையென சி.ஐ.ஏவும் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா செயலாளரையும் முஹம்மத் பின் சல்மான் சந்திக்கவுள்ளதாக சவுதி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment