
நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து வரும் மஹிந்த அணி, தாம் தொடர்ந்தும் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கிறது.
இந்நிலையில், நாளைய தினம் மஹிந்த ராஜபக்ச பொது மக்கள் நிதியைப் பயன்படுத்துவதற்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் கலந்து கொண்டு வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலவே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பிரதமரோ அமைச்சரவையோ இல்லையென சபாநாயகர் தெரிவித்துள்ளார். எனினும், மஹிந்த தரப்பு நிழல் அரசைத் தொடர்கின்ற நிலையில் நிதிக் கையாடலை முடக்க முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment