கரு ஜயசூரியவுக்கு எதிராக மேலும் ஒரு முறைப்பாடு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 November 2018

கரு ஜயசூரியவுக்கு எதிராக மேலும் ஒரு முறைப்பாடு!


ஹன்சார்ட்டை தவறான முறையில் திருத்தம் செய்து போலியான ஹன்சார்ட்டை வெளியிட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக இன்று பொலிஸ் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.



நவம்பர் மாதம் இதுவரை இடம்பெற்ற எந்தவொரு நாடாளுமன்ற அமர்வும் செல்லாது என மஹிந்த அணி தெரிவித்து வரும் நிலையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டமையை உறுதிப்படுத்தி ஹன்சார்ட் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், அது போலியாக திருத்தஞ்செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதோடு கம்மன்பில ஹன்சார்ட் எடிட்டருக்கு நேரடியாகவே தனது ஆட்சேபனையை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment