
முகப்புத்தகம் ஊடாக கைத்தொலைபேசிகள் தருவதாக பலரை ஏமாற்றி வந்த 21 வயது நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீர்கொழும்பு, ஜாஎல பகுதியைச் சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
கைத்தொலைபேசி தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடம் குறித்த நபர் பணம் பறித்துள்ள போதிலும் யாருக்கும் அவ்வாறு கைத்தொலைபேசிகளைத் தரவில்லையென பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment