மைத்ரியின் கோபம் ஏன்? விளக்குகிறார் ரஞ்சன்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 21 November 2018

மைத்ரியின் கோபம் ஏன்? விளக்குகிறார் ரஞ்சன்!


மூன்று வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அக்கட்சியின் ஆதரவுடன் பொது வேட்பாளராக வெற்றி பெற்ற போதிலும் திடீரென மஹிந்தவை பிரதமராக நியமித்து மைத்ரிபால சிறிசேன உருவாக்கியுள்ள அரசியல் சூழ்ச்சியின் பின்னணி பற்றி விளக்கமளித்துள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.


அவரது கூற்றின் படி, அண்மையில் அடுத்த தேர்தல் பற்றிய பேச்சின் போது மீண்டும் பொது வேட்பளராகத் தன்னை ஐக்கிய தேசியக் கட்சி அங்கீகரிக்குமா என்பதை மைத்ரி அறிய முற்பட்டதாகவும் எனினும், ஐக்கிய தேசியக் கட்சி சாதகமான பதிலொன்றைத் தராததனாலேயே மைத்ரி மாற்று அணியை நாடியதாகவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, மஹிந்தவின் நியமனம் நியாயப்படுத்தப்பட்டு அரசாங்கம் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டால் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு மீண்டும் மஹிந்தவே பிரதமராக நியமிக்கப்படக்கூடும் எனவும் எதிர்பார்ப்பு நிலவுவதுடன் மாற்றீடாக கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டு மஹிந்த பிரதமராகி 19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாகவே ஆட்சியை நிறுவக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும், மைத்ரிபால சிறிசேன தனது எதிர்காலத்துக்கான உத்தரவாதமின்றி மஹிந்தவுடன் கூட்டிணையவில்லையெனும் வாதமும் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment