
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்துக்கு அவரது அமைச்சரவை முழு அளவில் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடிய போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை விரைவில் நாடாளுமன்றில் குறித்த மினி பட்ஜட் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடாளுமன்றைப் பொறுத்தவரை அமைச்சரவை என்றொன்றில்லையென்பதால் அமைச்சு செயலாளர்கள் பொது மக்கள் நிதியைக் கையாளத் தடை கோரிய பிரேரணையொன்றும் நாடாளுமன்றில் கையளிக்கப்பட்டுள்ளதுடன் 29ம் திகதி விவாதம் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment