
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 23ம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கான பகதிகள் மூடப்பட்டிருக்கும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்றும் அவ்வாறே இடம்பெற்றிருந்த நிலையில் நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்குள் கூடிக் கலைந்திருந்தது. இந்நிலையில் அடுத்த முக்கியமான விவாதம் 29ம் திகதியே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை சபை நடவடிக்கைகள் குழப்பியடிக்கப்படும் எனும் அச்சம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment