
நாடாளுமன்ற தெரிவு குழுவில் தமது தரப்புக்கு கூடுதல் இடம்தரப்பட வேண்டும் என தெரிவித்து மஹிந்த அணி வெளிநடப்பு செய்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு தலா ஐவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பிக்கு தலா ஒரு உறுப்பினர்களும் வழஙகப்பட்டு நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனத்தை சபாநாயகர் அறிவித்திருந்த நிலையில் தமக்கு அதிக உறுப்பினர்கள் இல்லாததால் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென மஹிந்த அணி வெளியேறியுள்ளது.
இந்நிலையில் சபாநாயகர் தலைமையில் இதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment