
ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த போதிலும் அவருக்கான நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடியாத சூழ்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உத்தியோகபூர்வமான இணைந்து கொண்டுள்ளதுடன் கூட்டு எதிர்க்கட்சியினர் அக்கட்சியிலேயே போட்டி போட விரும்புவதாக தெரிவித்து வருகின்றனர்.
மஹிந்த தரப்பு தனித்துப் போட்டியிடின் மீண்டும் கூட்டணி ஆட்சியே உருவாகும் அதேவேளை மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரும் நிறுத்தப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment