
தனது நடவடிக்கைகள் மீது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து விமர்சனங்கள் வெளியிட்டு வருவதை விடுத்து முடிந்தால் தனக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வரும்படி தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
நாடாளுமன்ற தெரிவுக்குழு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது மஹிந்த தரப்பு வெளிநடப்பு செய்த போதிலும் 121 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஆதரித்து வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில், டிசம்பர் 7ம் திகதி தீர்ப்பு வரும் வரை தாம் இனி சபை அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லையென மஹிந்த தரப்பு தெரிவிக்கின்றது. இதேவேளை, சபாநாயகர் பக்கசார்பாக நடந்து கொள்வதாகவும் ஆளுந்தரப்பாக தம்மை ஏற்றுக்கொண்டு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமக்கு பெரும்பான்மையைத் தர வேண்டும் எனவும் மஹிந்த அணி நிபந்தனை விதித்துள்ளது.
ஆயினும், தற்சமயம் நாட்டில் அரசாங்கம் ஒன்றில்லையெனவும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அது தோற்கடிக்கப்பட்டு விட்டதாக சபாநாயகர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்கதக்து.
No comments:
Post a Comment