
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஒரு வகையில் காரணமான மைத்ரி - கோத்தா கொலை விவகார பின்னணியில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடாத்தி வரும் விசாரணையை பொலிஸ் மா அதிபர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அறியமுடிகிறது.
இதுவரை மூன்று தடவைகள் விசாரணைக்கான அழைப்பாணையை புறக்கணித்துள்ள பூஜித இது தொடர்பில் அமைதி காத்து வருகிறார்.
கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வாவை பொலிஸ் உளவாளி நாமல் குமாரவுக்கு பூஜித ஜயசுந்தரவே அறிமுகப்படுத்தி வைத்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையிலேயே மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற்றுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பூஜிதவையும் விசாரிக்க முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தககது.
No comments:
Post a Comment