
நாடாளுமன்ற அமர்வுகளை மஹிந்த அணி புறக்கணித்து வரும் நிலையில், நாடாளுமன்றம் கூடுவதே சட்ட விரோதம் என தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
தமது தரப்பு நாடாளுமன்றைப் புறக்கணிக்கிறது என்பதை விட சபாநாயகருக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறது என்பதே பொருந்தும் என விளக்கமளிக்கும் அவர், தற்போதைய நாடாளுமன்றம் கூடுவதே சட்டவிரோதம் எனவும் சம்பிரதாயங்கள் அனைத்தும் மீறப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கிறார்.
கரு ஜயசூரியவின் நடவடிக்கைகள் கடந்த கால சபாநாயகர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்ற அதேவேளை, கரு ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துணிந்து செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு தெரிவிக்கின்றமையும் முடிந்தால் தனக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து தன்னை நீக்கும்படி கரு ஜயசூரிய தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment