
தம்மைத்தானே அரசாங்கம் எனக் கூறிக் கொண்டு கடந்த ஒரு மாத காலமாக பலாத்காரமாக ஆட்சியைப் பிடித்து வைத்துக் கொண்டிருப்போர் நாடாளுமன்றில் ஒரு பிரேரணையைக் கூட நிறைவேற்ற முடியாமல் பயந்து ஓடுவதாகவும் இவ்வாறு இடம்பெறுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதற்தடவையெனவும் தெரிவிக்கிறார் லக்ஷ்மன் கிரியல்ல.
இன்றைய தினம் மஹிந்த அணி இல்லாமலேயே மீண்டும் நாடாளுமன்றம் கூடியிருந்த நிலையில் அங்கு உரையாற்றுகையிலேயே லக்ஷமன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மஹிந்த தலைமையில் கூடிய அவரது கட்சி உறுப்பினர்கள் இன்று மீண்டும் நாடாளுமன்றைப் புறக்கணிக்கத் தீர்மானித்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றமையும் கடந்த வாரம் வாக்கெடுப்பில் மஹிந்த அணி இல்லாமல் 121 பேர் வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment