
மைத்ரிபால சிறிசேனவுடன் பேசி எந்தப் பயனும் இல்லையெனவும் அவரை எத்தனைக்கும் நம்ப முடியாது எனவும் இன்று நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
இதற்கு முன் எத்தனையோ தடவை மைத்ரிபாலவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள போதிலும் அவர் அதில் வழங்கப்பட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதில்லையென தெரிவித்துள்ள அநுர, தற்போது நிலவும் பிரச்சினை பேச்சுவார்த்தைக்கு உரியதன்று மாறாக நாட்டின் அரசியல் சட்டத்தின் வழிக்கு ஜனாதிபதியை இழுத்து வருவது. எனவே, அவருடன் பேசிப் பயனில்லையென தெரிவிக்கிறார்.
இதேவேளை, இன்றைய தினம் பிரேரணை நிறைவேற்றப்பட்ட கையோடு ரணில் விக்கிரமசிங்கவும் அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என அநுர தெரிவித்திருந்தமையும் இதற்கு பதிலளித்த கிரியல்ல, அரச நிதி பயன்படுத்தப்படவில்லை, மாறாக தனியார் நிதியுதவிகளின் ஊடாகவே ரணிலின் அலரி மாளிகை செலவீனங்கள் ஈடுசெய்யப்படுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment