இன்று 123: இனி இன்னும் அதிகரிக்கும்: சஜித்! - sonakar.com

Post Top Ad

Thursday, 29 November 2018

இன்று 123: இனி இன்னும் அதிகரிக்கும்: சஜித்!


நாடாளுமன்றில் இன்று 123 பேர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் பொது நிதியைப் பயன்படுத்துவதற்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் தமது அணி இன்னும் பலம் பெறும் எனவும் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் சஜித் பிரேமதாச.



வசந்த சேனாநாயக்க ஏலவே தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு மஹிந்த அணியை விட்டு நீங்கியுள்ள நிலையில், இன்றைய அமர்வில் விஜேதாச ராஜபக்ச மற்றும் அத்துராலியே ரதன தேரர் கலந்து கொண்டிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமையும் போது விட்டுச் சென்றவர்கள் திரும்ப வருவார்கள் என ஏலவே ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்த அதேவேளை ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதை ஜே.வி.பி ஆதரிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறது.

ஆயினும், அதற்குத் தேவையான நாடாளுமன்ற பெரும்பான்மையையும் ஐக்கிய தேசியக் கட்சி தக்க வைத்துக் கொண்டிருப்பதாக சஜித் உறுதிபட தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment