
கடந்த ஒரு மாதத்துக்குள் கட்சி தாவுவதில் சாதனை படைத்து, நேற்றைய தினம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இனி கட்சித் தாவப் போவதில்லையென தெரிவித்திருந்த வசந்த சேனாநாயக்க, இனி தான் நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கப் போவதாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
மைத்ரி - மஹிந்த கூட்டணியிடமும் அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களிடமும் நேற்றைய தினம் மன்னிப்புக் கோரிய வசந்த, இனிமேலும் கட்சி தாவும் நாடகத்தில் ஈடுபடப் போவதில்லையென தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் மீண்டும் தமது பக்கம் திரும்பி விட்டதாக அகில விராஜ் அறிவித்திருந்ததுடன் அவரை ஏற்றுக்கொண்டு கூட்டத்திலும் பங்கேற்க அனுமதித்திருந்தார். இந்நிலையிலேயே வசந்த மீண்டும் தன் நிலையைக் குழப்பகரமானதாக ஆக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment