மத்திய வங்கி ஊழல்: புதிய 'பெயர்கள்' வெளிவரும்: யாப்பா! - sonakar.com

Post Top Ad

Tuesday, 27 November 2018

மத்திய வங்கி ஊழல்: புதிய 'பெயர்கள்' வெளிவரும்: யாப்பா!


மத்திய வங்கி ஊழலில் தொடர்புபட்ட புதிய பெயர்கள் சில அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் லக்ஷ்மன் யாப்பா.

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் பின் அதற்கான அறிக்கை வெளியிடப்பட்டிருந்த போதிலும் அப்போதிருந்தே பல முரண்பாடுகள் வெளியிடப்பட்டு வருவதுடன் அறிக்கையின் முழுமையான வடிவம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வந்தது.



இந்நிலையில், மீண்டும் இவ்விவகாரம் கையிலெடுக்கப்பட்டிருப்பதுடன் தமிழ் - சிங்கள மொழிகளிலான மொழிபெயர்ப்புகளும் முறையாக வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்சமயம் மைத்ரிபால சிறிசேன - மஹிந்த கூட்டு நிலவுகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியை குறித்த அறிக்கை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment