
டிசம்பர் 7ம் திகதிக்குள் மஹிந்த அரசாங்கம் அதிரடி முடிவுகள் சிலவற்றை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் நிசந்த முத்துஹெட்டிகமகே.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தீவிர மஹிந்த ஆதரவாளராக இருந்து மைத்ரியின் மேடைக்கு எரியூட்டிய நிசந்த பின் அமைச்சரவைப் பதவியைப் பெற்று மைத்ரி ஆதரவாளராகியிருந்தார். தற்சமயம் மீண்டும் மஹிந்த ஆதரவாளராக மாறியுள்ள நிலையிலேயே நிசந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்சமயம் நாடாளுமன்றில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில்லையெனவும் மஹிந்த தரப்புக்கு ஆகக்குறைந்தது 103 பேர் ஆதரவளிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 100 பேரே ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment